Menu


தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் 1954 முதல் 1968 வரை வெளியிடப்பெற்ற கலைக்களஞ்சியத்தின் 10 தொகுதிகளில் இருந்தும் தமிழ், தமிழ் சார்ந்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து பகுத்து, தொகுத்துத் தமிழியல் கலைக்களஞ்சியம் என்ற வகையில் இரண்டு தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ் வழிப் பாடநூல்களிலிருந்து தலைச்சொற்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இச்சொற்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பொருள்களும், இலக்கணக் குறிப்புகளும், மேற்கோள்களும் உரிய படங்களுடன் இடம்பெறுகின்றன. இது மாணவர்களின் பயன்பாட்டிற்குப் பெரிதும் துணை நிற்கும்.
தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள உயர்ந்த சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்களஞ்சியம் தமிழர்களின் சிந்தனை வளத்தை உலகிற்கு வெளிப்படுத்தும். மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள், நீதிபதிகள், சொற்பொழிவாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் தங்கள் பேச்சிலும் எழுத்திலும் இச்சிந்தனைகளை மேற்கோள்களாகப் பயன்படுத்த இது பெரிதும் துணைபுரியும்.