Menu
தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் 1954 முதல் 1968 முடிய வெளியிடப்பெற்ற கலைக்களஞ்சியத்தின் 10 தொகுதிகளில் இருந்தும் தமிழ், தமிழ் சார்ந்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து பகுத்து, தொகுத்துத் தமிழியல் கலைக்களஞ்சியம் என்ற வகையில் இரண்டு தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன
தமிழ் நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ் வழிப் பாடநூல்களிலிருந்து அவற்றுள் இடம்பெறும் தலைச் சொற்களைத் தெரிவு செய்தல் , தொடரடைவு , தமிழ் ஆங்கில இலக்கணக் குறிப்பு ,மேற்கோள், ஒருபொருள் பன்மொழி ,எதிர்ச்சொல் உள்ளிட்டவை ஏற்புடைய படங்களுடன் மாணவர் பயன்பாட்டுக்குப் பெரிதும் துணை நிற்கும் வகையிலான மாணவர் அகராதி.
தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள உயர்ந்த சிந்தனைகளையும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப் கொண்டதாய் அமைய உள்ள சிந்தனைக் களஞ்சியம் ,தமிழர்தம் சிந்தனை வளத்தை வெளிப்படுத்தும் அயல் நாட்டினரும் இந்தியாவில் உள்ள பிற மொழியினரும் அறிந்து கொள்ள உதவும் ; உயர்ந்த சிந்தனைகள் ஊற்றெடுக்க உறுதுணையாகும் . ஞானம் நுண்ணறிவு அகத்தெழுச்சி ஆகியவற்றின் கருவூலமாகத் திகழும் தமிழர்தம் சிந்தனை வளர்ச்சி வரலாறு ,ஆசிரியர்கள் மாணவர்கள் நீதிபதிகள் சொற்பொழிவாளர்கள் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட இந்தியரும் அயல் நாட்டினரும் தமது படைப்பிலும் பேச்சிலும் மேற்கோள்கள் வாயிலாகப் பயன்படுத்திக்கொள்ள அழகுறச் செய்யவும் துணை புரியும்.