Menu
தமிழ் வளர்ச்சிக் கழகம் (Tamil Academy) 1947 செப்டம்பர் 26ஆம் நாள் Registration of Societies ACT XXI of 1980-இன் கீழ்ப் பதிவு செய்யப்பட்டது. அது பதிவு செய்யப்பட்ட நாள் முதல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் சீரிய முறையில் தமிழ்ப் பணியாற்றி வருகிறது. அன்றைய கல்வி அமைச்சர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.
திரு. சி. சுப்பிரமணியம், திரு. ராஜா சர் முத்தையா செட்டியார், டாக்டர் ஏ.எல். முதலியார், திரு. ப. சிதம்பரம், திரு. ம. பெரியசாமித்தூரன் போன்ற தமிழ் அறிஞர்கள் பங்கேற்று இந்நிறுவனத்தை வளர்த்து வந்துள்ளனர். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழ் மொழியில் பத்துத் தொகுதிகள் கொண்ட பொதுக் கலைக்களஞ்சியத்தை இந்நிறுவனம் வெளியிட்டது. அதன் பின்னர் பத்துத் தொகுதிகள் கொண்ட குழந்தைகள் கலைக்களஞ்சியத்தையும் வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளது.