தமிழ் வளர்ச்சிக் கழகம்

நாடகவியல் களஞ்சியம்

நிறைவேறியவை

நாடகவியல் களஞ்சியம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு நிதியுதவியில் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிடும் முதல் நூல் இது. 1946இல் அப்போதைய சென்னை மாகாணக் கல்வியமைச்சராக இருந்த திரு அவினாசிலிங்கம் அவர்களால் தொடங்கப் பெற்றது தமிழ் வளர்ச்சிக் கழகம். இப்பொழுது அறங்காவல் குழுத் தலைவராக மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் திரு ப. சிதம்பரம் அவர்கள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தொய்வின்றிப் பணிகளைத் தொடரத் தமிழ்நாடு அரசு 2 கோடியே 15 இலட்சம் நிதி வழங்கியிருக்கிறது. இந்த நிதியிலிருந்துதான் உருவாகியிருக்கிறது நாடகவியல் களஞ்சியம்.

தமிழ் நாடக அரங்கம் மற்றும் பாரம்பரிய விளக்கின் ஓவியம்

மிகவும் அகன்ற ஆழ்ந்த கலைச்சொல் நிர்வாகமாகப் பேராசிரியர் மு.ரா.வின் களஞ்சியம் அமைந்திருப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதுவது எனக்குத்தான் பெருமையாகப்படுகிறது.

முனைவர் இந்திரா பார்த்தசாரதி

மேனாள் இயக்குநர், கலாச்சாரத்துறை
நிறுவனர், நாடகப் பள்ளி, புதுவைப் பல்கலைக்கழகம்

தமிழ் நாடக அரங்கம் மற்றும் பாரம்பரிய விளக்கின் ஓவியம்

நூலாசிரியரின் கருத்து

முக்கால் நூற்றாண்டுக் காலத்திய என்னின் ஓட்டத்தில், இந்த இடத்தில், சற்றேறக்குறைய என் அரை நூற்றாண்டுகால நாடக அனுபவத்தில், எனக்குள்ளே பதிந்துபோயிருக்கின்றவற்றை, என் வாய்ப்பு அளவை, சமூகத்துக்கான நம்பிக்கைத் தடமாக, வருகிற தமிழ்ச் சமூகத்தின் பார்வையில் படும்படி, எவ்வாறாவது பத்திரப்படுத்திப் பாதுகாத்து வைக்க வேண்டுமென்கிற என் ஆவலை, அதையே நோக்கமாய்க் கொண்டு செயல்படும் 'தமிழ் வளர்ச்சிக் கழகத்'திடம் நம்பிக்கையுடன் நான் ஒப்படைக்கின்ற முயற்சிதான் இந்த நூல்!

தமிழியல் கலைக்களஞ்சியம்

தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் 1954 முதல் 1968 வரை வெளியிடப்பெற்ற கலைக்களஞ்சியத்தின் 10 தொகுதிகளில் இருந்தும் தமிழ், தமிழ் சார்ந்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து பகுத்து, தொகுத்துத் தமிழியல் கலைக்களஞ்சியம் என்ற வகையில் இரண்டு தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழியல் கலைக்களஞ்சியம்

நிகழ்ந்துகொண்டிருப்பவை

மாணவர் அகராதி

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ் வழிப் பாடநூல்களிலிருந்து தலைச்சொற்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இச்சொற்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பொருள்களும், இலக்கணக் குறிப்புகளும், மேற்கோள்களும் உரிய படங்களுடன் இடம்பெறுகின்றன. இது மாணவர்களின் பயன்பாட்டிற்குப் பெரிதும் துணை நிற்கும்.

சிந்தனைக் களஞ்சியம்

தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள உயர்ந்த சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்களஞ்சியம் தமிழர்களின் சிந்தனை வளத்தை உலகிற்கு வெளிப்படுத்தும். மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள், நீதிபதிகள், சொற்பொழிவாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் தங்கள் பேச்சிலும் எழுத்திலும் இச்சிந்தனைகளை மேற்கோள்களாகப் பயன்படுத்த இது பெரிதும் துணைபுரியும்.